செய்திகள்
சிறை கைதி

கேரளாவில் ஜெயில் கைதிகளின் சீருடை இனி டி-சர்ட், பெர்முடாஸ்- சிறைத்துறை டி.ஜி.பி. தகவல்

Published On 2021-01-15 07:55 GMT   |   Update On 2021-01-15 07:55 GMT
கேரள ஜெயில் கைதிகளுக்கு இனி சீருடையாக டி-சர்ட் மற்றும் பெர்முடாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சிறைத்துறை டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள ஜெயில்களில் கைதிகள் அடிக்கடி வேட்டி, லுங்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்யும் சம்பவங்கள் நடந்தன.

கோழிக்கோடு ஜெயிலில் 2 நாட்களுக்கு முன்பும் ஒரு கைதி இதுபோல தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கைதிகளின் சீருடையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஜெயில் நிர்வாகம் முடிவு செய்தது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிறைத்துறை டி.ஜி.பி. ரிஷிராஜ் சிங் தலைமையில் நடைபெற்றது.

இதையடுத்து கேரள ஜெயில் கைதிகளுக்கு இனி சீருடையாக டி-சர்ட் மற்றும் பெர்முடாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபோல பெண்களுக்கு சேலைக்கு பதில் சுடிதார் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இச்சீருடை மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. முதல் கட்டமாக கோழிக்கோடு ஜெயிலில் இந்த மாற்றம் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News