செய்திகள்
செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.

செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-02-27 00:22 GMT   |   Update On 2021-02-27 00:22 GMT
செண்பகராமன்புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மேலாளர் அலுவலகம் முன் டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரல்வாய்மொழி:

டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இ.எஸ்.ஐ. திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். விற்பனைக்கு தகுந்தார் போல் கடைகளில் பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கம் சார்பில் செண்பகராமன்புதூரில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். லால்குமார், சோபன், சங்கர், ரத்தின ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் சஜிதகுமார், வெளி மாவட்ட நிர்வாகிகள் கைக்கொண்டான், ராமகிருஷ்ணன் (தென்காசி), சிவகுமார் (கரூர்), உதயசங்கர் (கடலூர்), முருகன் (திருவண்ணாமலை), கண்ணன் (தென்சென்னை), ஸ்ரீதர் (திருவள்ளூர் கிழக்கு), சாதிக்பாட்சா (பெரம்பலூர் மற்றும் அரியலூர்) ஆகியோர் பேசினார்கள். மாநில அமைப்பாளர் குமார் சிறப்புரையாற்றினார். மாநில சிறப்பு தலைவர் பாரதி போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

இதில் பல இடங்களில் இருந்து ஏராளமான டாஸ்மாக் விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Tags:    

Similar News