ஆன்மிகம்
பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்

பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேசுவரர் கோவிலில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்

Published On 2021-08-19 03:46 GMT   |   Update On 2021-08-19 03:46 GMT
பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேசுவரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் மூலநட்சத்திர நாளன்று சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
பட்டிவீரன்பட்டியில் பிரசித்தி பெற்ற ஜோதிலிங்கேசுவரர், சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் மூலநட்சத்திர நாளன்று சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கோவிலில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிவபெருமான் கையில் தங்க மண்வெட்டி மற்றும் தங்க கூடையில் மண் சுமந்தபடி கோவில் வளாகத்தில் வலம் வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.
Tags:    

Similar News