உள்ளூர் செய்திகள்
ஒத்திகை பயிற்சி

தீவிபத்து ஏற்பட்டால் பாதுகாத்து கொள்வது எப்படி?- திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையினர் எச்சரிக்கை

Published On 2022-05-07 07:10 GMT   |   Update On 2022-05-07 07:10 GMT
திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டால் மீட்பது மற்றும் பாதுகாத்து கொள்வது குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
திருவள்ளூர்:

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர்.

இது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் விதமாக இன்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டால் மீட்பது மற்றும் பாதுகாத்து கொள்வது குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் தீயணைப்பு மாவட்ட அலுவலர் பாஸ்கரன், உதவி மாவட்ட அலுவலர் வின்சன் ராஜ்குமார், நிலைய அலுவலர் இளங்கோவன், சிறப்பு நிலை அலுவலர்கள் ஞானவேல், சிவக்குமார், பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மருத்துவமனை வளாகத்தில் எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து செய்முறை விளக்கமாக எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

மேலும் தீ விபத்து காலங்களில் எவ்வாறு விரைந்து செயல்படுவது என கூறி தத்துரூபமாக செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியை மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.
Tags:    

Similar News