தமிழ்நாடு
வக்கீல்கள் கவுன் அணிய விலக்கு

கோடை கால வெப்பம் அதிகரிப்பதால் வக்கீல்கள் கவுன் அணிய விலக்கு- தலைமை நீதிபதி ஒப்புதல்

Published On 2022-05-06 06:41 GMT   |   Update On 2022-05-06 06:41 GMT
கோடை காலம் முடியும் வரை வக்கீல்கள் கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை:

கோடை வெயில் வாட்டி எடுப்பதால் பகல் நேரங்களில் சாலைகளில் நடமாடுவோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சென்னை ஐகோர்ட்டில் பணிபுரியும் வக்கீல்களும் கோடை காலத்தில் கவுன் (கருப்பு அங்கி) அணிந்து பணிபுரிவதால் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கவுன் அணிந்து பணிபுரியும் போது வக்கீல்களுக்கு கடுமையான புழுக்கம் ஏற்படும் நிலையும் இருந்தது. உடலில் அதிக வியர்வையும் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கோடை காலம் முடியும் வரை வக்கீல்கள் கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வக்கீல் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வக்கீல்களின் இந்த கோரிக்கையை ஏற்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி வக்கீல்கள் கோடை காலம் முடியும் வரை கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளித்துள்ளார்.
Tags:    

Similar News