வழிபாடு
பூரணாங்குப்பம் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்

பூரணாங்குப்பம் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்

Published On 2022-01-04 06:19 GMT   |   Update On 2022-01-04 06:19 GMT
பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவிலில் அம்மன் 8 கைகளுடன் சூலம் ஏந்தி காளி அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.
தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி மற்றும் அமாவாசையன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி மார்கழி மாத அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் இரவு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து அம்மன் 8 கைகளுடன் சூலம் ஏந்தி காளி அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் உள்ளுர் மட்டுமின்றி சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை அங்காளம்மன் அன்னதான குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News