பொது மருத்துவம்
தூங்கும் போது குறட்டை சத்தம்...

தூங்கும் போது குறட்டை சத்தம்...

Published On 2022-05-04 07:21 GMT   |   Update On 2022-05-04 07:21 GMT
எப்போதாவது குறட்டை விட்டால் பிரச்சினை இல்லை, குறட்டை சத்தம் அந்த அறையில், சில சமயங்களில் அந்த வீட்டில் யாரையும் தூங்கவிடாமல் செய்துவிடும்.
தூங்கும் போது குறட்டை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் எடை அதிகரித்தல். பலருக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் நாளடைவில் குறட்டையும் வந்துவிடுகிறது.

ஒருவித ஒவ்வாமையாலும் சைனஸ் பிரச்சினையாலும், மூக்கிலிருக்கும் மெல்லிய தடுப்புச் சுவர் வளைவதாலும், தொண்டையிலும் அடிநாக்கிலும் தசைநார்கள் வலுவிழப்பதாலும், குடிப்பழக்கத்தாலும், தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், தொண்டையில் உள்ள சதை தடிப்பதாலும், குழந்தைகளுக்கு டான்சில் அல்லது அடினாய்டுகள் ஏற்படுவதாலும், உள்நாக்கு நீண்டு காற்று செல்லும் வழியைத் தடுப்பதாலும் குறட்டை ஏற்படுகிறது.

எப்போதாவது குறட்டை விட்டால் பிரச்சினை இல்லை, குறட்டை சத்தம் அந்த அறையில், சில சமயங்களில் அந்த வீட்டில் யாரையும் தூங்கவிடாமல் செய்துவிடும். குறட்டை விடுவதால் அவர்களால் தொடர்ந்து தூங்க முடியாது. அப்படி வரும் தூக்கமும் ஆழ்ந்த தூக்கமாக இருக்காது. தங்களுக்கு தூக்கக் குறைவு ஏற்படுகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்களால் உணரவும் முடியாது. அடுத்த நாள் வேலைக்குச் செல்லும்போது அல்லது வேலையில் இருக்கும்போது கண்ணை செருகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய தசைகள் விரிவடையும்.

இதுவே தொடர்ந்தால் சில வேளைகளில் மாரடைப்பு, பக்கவாதம் வர காரணமாக அமையலாம் என்கிறார்கள், டாக்டர்கள்.
Tags:    

Similar News