செய்திகள்
மாநிலங்களவையில் பேசிய அவைத்தலைவர் வெங்கையா நாயுடு

மாநிலங்களவையில் 4 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்- அவை நாளை காலை வரை ஒத்திவைப்பு

Published On 2020-09-18 09:41 GMT   |   Update On 2020-09-18 10:36 GMT
மாநிலங்களவையில் ஹோமியோபதி மத்திய கவுன்சில் மசோதா உள்ளிட்ட 4 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுடெல்லி:

மழைக்கால கூட்டத்தொடரின் 5-வது நாளான இன்று காலை மாநிலங்களவை கூடியதும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி அசோக் கஸ்தி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்பை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு வாசித்தார். அத்துடன் அரை மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. 

அதன்பின்னர் அவை நடவடிக்கை தொடங்கியதும், ஹோமியோபதி மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2020 மற்றும் இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின்னர், மந்திரிகளுக்கான சம்பளம் மற்றும் படிகள் (திருத்த) மசோதா 2020, எம்.பி.க்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வதிய (திருத்தம்) மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அதன்பின்னர் மாநிலங்களவை நடவடிக்கைகள் நாளை காலை 9 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
Tags:    

Similar News