செய்திகள்
ஐஜி பொன் மாணிக்கவேல்

தமிழக அரசுக்கும், எங்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான் பிரச்சனை -பொன்.மாணிக்கவேல்

Published On 2019-09-13 03:41 GMT   |   Update On 2019-09-13 03:41 GMT
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலையை சென்னைக்கு கொண்டு வந்த பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சென்னை:

கடந்த 1982ம் ஆண்டு தமிழக கோவிலில் இருந்து ஐம்பொன் நடராஜர் சிலை திருடப்பட்டது. இந்த சிலையை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினரின் தீவிர முயற்சியால் சிலை எங்கு இருந்தது என்பது தெரிய வந்தது. அந்த சிலை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிலை பத்திரமாக மீட்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை விரைவு ரெயில் மூலம் சென்னைக்கு நடராஜர் சிலை கொண்டு வரப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பொன்.மாணிக்கவேல் பேட்டியளித்தபோது கூறியதாவது:



சிலைகள் கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசுக்கும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான் பிரச்சனை உள்ளது.

கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம்.சிலைக்கடத்தல் வழக்குகளுக்கு எனது குழு மற்றும் ஊடகங்களும் உதவியாக இருந்தன. ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்க உதவி செய்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி.

நடராஜர் சிலை அங்குள்ள அருங்காட்சியகத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. எந்த சிலையும் காட்சி பொருள் அல்ல. இன்னும் நிறைய சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது. அனுமதி அளித்தால் எல்லா சிலைகளும் மீட்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.   


Tags:    

Similar News