செய்திகள்
பிரக்யா சிங் தாக்கூர்

கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம்- மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங்

Published On 2019-11-29 07:28 GMT   |   Update On 2019-11-29 07:28 GMT
கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரினார்.
புதுடெல்லி:

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர். இவர் போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக இருக்கிறார். நேற்று முன்தினம் பாராளுமன்ற மக்களவையில், பிரக்யா சிங் குறுக்கிட்டு பேசுகையில், நாதுராம் கோட்சேவை ‘தேச பக்தர்‘ என்று புகழ்ந்தார். அவரது கருத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன.

நேற்றும் அவரது கருத்துக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளித்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, கோட்சேவை தேச பக்தர் என்று கூறுவதை கண்டிப்பதாக கூறினார். அத்துடன், பிரக்யா சிங் பாதுகாப்பு அமைச்சகத்துக்கான பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், கோட்சே குறித்து தெரிவித்த கருத்துக்கு பிரக்யா சிங் தாக்கூர் இன்று மக்களவையில் மன்னிப்பு கோரினார். கோட்சேவின் பெயரைக் குறிப்பிடாமல்  பேசிய அவர், ‘நான் தெரிவித்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்’ என்றார்.
Tags:    

Similar News