ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார்

13 புது எலெக்ட்ரிக் கார்கள் - பிஎம்டபிள்யூ அசத்தல் திட்டம்

Published On 2021-03-20 09:25 GMT   |   Update On 2021-03-20 09:25 GMT
சர்வதேச சந்தையில் 13 புது எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.


ஆடம்பர கார் உற்பத்தியாளரான பிஎம்டபிள்யூ தனது பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலான ஐஎக்ஸ்-ஐ சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் எக்ஸ்டிரைவ் 40 மற்றும் எக்ஸ்டிரைவ் 50 என இரு வெர்ஷன்களில் கிடைக்கும் என பிஎம்டபிள்யூ தெரிவித்து இருக்கிறது.



இதுமட்டுமின்றி சர்வதேச சந்தையில் 2030 ஆண்டுக்குள் 13 முழுமையான எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக பிஎம்டபிள்யூ அறிவித்து உள்ளது. அதன்படி 2023 ஆண்டுக்குள் ஒவ்வொரு முக்கிய பிரிவுகளில் குறைந்தபட்சம் ஒரு எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டு இருக்கிறது.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 20 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய பிஎம்டபிள்யூ இலக்கு நிர்ணயித்து உள்ளது. மேலும் பிஎம்டபிள்யூ ஒட்டுமொத்த விற்பனையில் 50 சதவீதம் எலெக்ட்ரிக் மாடல்களாக மாறும் என கணித்துள்ளது. 
Tags:    

Similar News