செய்திகள்
மத்திய அரசு

ரூ.125 கோடி ராணுவ கட்டிடத்தை இடிக்க மத்திய அரசு உத்தரவு

Published On 2020-10-15 00:32 GMT   |   Update On 2020-10-15 00:32 GMT
தரம் குறைந்த மூலப்பொருட்களை கொண்டு கட்டப்பட்ட ரூ.125 கோடி ராணுவ கட்டிடத்தை இடிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டம் கனாசரில் ரூ.125 கோடி செலவில் ராணுவ நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதன் கட்டுமானம் குறித்து புகார்கள் எழுந்ததால், சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

தரம் குறைந்த மூலப்பொருட்களை கொண்டு, தரமின்றி கட்டடம் கட்டப்பட்டு இருப்பதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெடிபொருட்களை சேமிப்பதற்கும், ஊழியர்கள் தங்குவதற்கும் அக்கட்டிடம் பாதுகாப்பற்றது என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த கட்டிடத்தை இடிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தரமற்ற கட்டுமானத்துக்கு ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டதே காரணம். அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News