செய்திகள்
நகை பறிப்பு

கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு

Published On 2021-01-27 11:43 GMT   |   Update On 2021-01-27 11:43 GMT
கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான்:

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. கும்பாபிஷேக விழாவிற்கு வந்த 8 பெண்களிடம் மர்ம கும்பல் நகையை பறித்துச் சென்று விட்டது. இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கும்பாபிஷேக விழாவின்போது கஸ்தூரிபாய் என்ற பெண்ணிடம் 8 பவுன், சிவஞானத்திடம் 3 பவுன், பஞ்சவர்ணத்திடம் 2 பவுன், ராமுத்தாயிடம் ஒரு பவுன், மற்றொரு பஞ்சவர்ணத்திடம் 3 பவுன், அமராவதியிடம் 3 பவுன், செல்லம்மாளிடம் ஒரு பவுன், சரஸ்வதியிடம் 3 பவுன் ஆகிய 8 பெண்களிடம் இருந்து சுமார் 24 பவுன் நகைகளை ஆசாமிகள் பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் தனிப்படை அமைத்து பெண்களிடம் நகையை பறித்து சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News