உடற்பயிற்சி
சுப்த மச்சேந்திராசனம்

சிறுநீரகப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆசனம்

Published On 2022-01-05 06:14 GMT   |   Update On 2022-01-05 06:14 GMT
இந்த ஆசனம் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கும். இந்த ஆசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
செய்முறை

விரிப்பில் இரண்டு கால்களையும் நீட்டி மல்லாக்கப்படுக்க வேண்டும். வலது காலை மட்டும் மடக்கி நெஞ்சுக்கு நேராக (இடதுபுறமாக) நீட்ட வேண்டும். அதன் பிறகு வலது காலை இடது கையால் பிடிக்க வேண்டும்.

அதே வேளையில் வலது கையை நேராக நீட்டி வைக்கவும். தலையை வலதுபுறமாக சாய்க்க வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவேண்டும். பின்னர் கால்களை மாற்றி செய்ய வேண்டும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

பயன்கள்

இந்த ஆசனம் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரக்க செய்யும். அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஆசனம் உகந்தது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கும். சிறுநீரகப்பிரச்சனைகளையும் சரி செய்ய உதவும்.
Tags:    

Similar News