ஆன்மிகம்
அத்தி வரதர்

ஆரஞ்சு நிற பட்டாடையில் காட்சியளித்த அத்தி வரதரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்

Published On 2019-07-06 05:01 GMT   |   Update On 2019-07-06 05:01 GMT
ஆரஞ்சு நிற பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதரை நேற்று ஒரே நாளில் 85 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அடுத்த மாதம் 17-ந் தேதி வரை பொதுமக்கள் அத்திவரதரை தரிசிக்கலாம்.

அத்திவரதரை தரிசிக்க தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். நேற்று 5-வது நாளாக அத்திவரதருக்கு ஆரஞ்சு நிற பட்டாடை அணிவிக்கப்பட்டது.

பின்னர் வண்ண மலர்களால் அலங்கரித்து, தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று ஒரு நாள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க 85 ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர்.

இந்திய தலைமை அரசு வக்கீல் பராசரன் குடும்பத்துடன் சென்று நேற்று அத்திவரதரை தரிசனம் செய்தார்.
Tags:    

Similar News