ஆன்மிகம்
சிவன்

கடன் பிரச்சினை தீர விரதம் இருந்து ருண விமோசன பிரதோஷத்தில் சிவனை தரிசனம் செய்யுங்க

Published On 2021-04-08 01:25 GMT   |   Update On 2021-04-08 01:25 GMT
பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
கடன் பிரச்சினையில் தவிப்பவர்கள் ருண விமோசன பிரதோஷ காலத்திலும் மைத்ர முகூர்த்த நேரத்திலும் கடனை அடைக்கலாம். ருண விமோசன பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தி பகவானையும் வணங்க கடன் பிரச்சினை தீரும்.ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. அந்த சூழ்நிலை ஜோதிடத்தில் எப்படி அமைகிறது என பார்ப்போம்.

ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் ஆகும். ருணம் என்பது கடனை குறிக்க கூடியது. இந்நாளில் நந்தியெம்பெருமானை வேண்டி வணங்கி அருகம்புல் மாலைசாற்றி, நெய் தீபம் ஏற்றி,பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசிப்பதன் மூலம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.

சிவன் அபிஷேகப் பிரியன் என்பதால் பிரதோஷம் தினத்தில் கறந்த பசும்பால் கொடுத்து வழிபட வேண்டும். இளநீர் வாங்கித் தரலாம். வில்வ இலை வாங்கிக் தரலாம்.
Tags:    

Similar News