செய்திகள்
கோப்புபடம்

போலி கால்நடை டாக்டர்கள்-குவியும் புகார்கள்

Published On 2021-07-19 09:20 GMT   |   Update On 2021-07-19 09:20 GMT
சினை ஊசி செலுத்துவதற்கு பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கால்நடை மருத்துவர்கள் என்ற பெயரில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்கள் குறித்து அவ்வப்போது புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுகுறித்து கால்நடைத்துறையினர் கூறுகையில்:-

கால்நடைகளுக்கு, கால்நடை மருத்துவப் பேரவையில்(வெட்னரி கவுன்சில்) பதிவுபெற்ற கால்நடை மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிப்பதற்கான அங்கீகாரம் பெற்றவர்கள். போலி மருத்துவர் மூலம் கால்நடைகள் சிகிச்சை பெறும்போது ஏற்படும் குறைபாடுகளுக்கு காப்பீடு நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு கிடைக்காது. சினை ஊசி செலுத்துவதற்கு பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் கால்நடைகளுக்கு கருவூட்டல் பணி மேற்கொள்ளலாம்.

அதேசமயம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்பதை கால்நடை வளர்ப்பாளர்கள் அறிய வேண்டும். போலி கால்நடை மருத்துவர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரிந்தால் அந்தந்த மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் தரலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News