செய்திகள்
இந்து முன்னணி சார்பில் கபாலீஸ்வரர் கோவில் முன் விளக்கேற்றி ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

சென்னையில் 60 கோவில்கள் முன்பு கற்பூரம் ஏற்றி இந்து முன்னணி போராட்டம்

Published On 2021-06-25 06:03 GMT   |   Update On 2021-06-25 06:03 GMT
சென்னையில் மட்டும் 16 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள 60 கோவில்கள் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை:

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவில்களில் பொதுமக்கள் வழிபட இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதை கண்டித்தும் கோவில்களை திறக்க வலியுறுத்தியும் கோவில்கள் முன்பு கற்பூர தீபம் ஏற்றி போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்ணனி அறிவித்தது.

அதன்படி இன்று அனைத்து கோவில்கள் முன்பும், போராட்டம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 16 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள 60 கோவில்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கங்காதீஸ்வரர் கோவில் முன்பு ராஜூ தலைமையிலும், பாதாள பொன்னியம்மன் கோவில் முன்பு வெங்கடேஷ் தலைமையிலும், சூளை அங்காளம்மன் கோவில் முன்பு செல்வம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வடபழனி முருகன் கோவில் முன்பு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், வடபழனி வேங்கீஸ்வரர் கோவில் முன்பு செந்தில் தலைமையிலும், கபாலீஸ்வரர் கோவில் முன்பு இளங்கோவன், முண்டக கன்னியம்மன் கோவில் முன்பு முருகன் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்பாட்டங்களில் இந்து முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News