ஆன்மிகம்
அழகர்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் வெறிச்சோடி இருப்பதை காணல

நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராட அனுமதிக்க பக்தர்கள் கோரிக்கை

Published On 2020-12-21 06:52 GMT   |   Update On 2020-12-21 06:52 GMT
நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராட அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
108 வைணவ தலங்களில் ஒன்றான தென் திருப்பதி என போற்றி அழைக்கப்படுவது மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலின் அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது.

கொரோனா தொற்று காரணமாகவும், அரசு தடை உத்தரவு உள்ளதாலும் கடந்த 8 மாதங்களுக்கு மேல் இங்கு புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அரசு பல தளர்வுகளை அறிவித்தது.

இதையொட்டி கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அழகர்கோவில், சோலைமலை முருகன், பதினெட்டாம் படிகருப்பணசுவாமி, மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் ஆகிய கோவில்களில் தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். குற்றாலத்தில் அருவியில் நீராடுவதற்கும், திருச்செந்தூர், ராமேசுவரம், கடல்களில் நீராடுவதற்கு அரசு வழிகாட்டுதல்படி அனுமதிக்கப்பட்டது.

ஆனால் நூபுர கங்கையில் மட்டும் தீர்த்தமாட இன்னும் அரசு அனுமதி அளிக்கவில்லை. அரசும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விரைவில் புனித நீராட அனுமதிக்க வேண்டும் என்று பத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News