தொழில்நுட்பம்

அதிநவீன உடல்நலன் சார்ந்த அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஃபிட் அறிமுகம்

Published On 2019-02-21 08:58 GMT   |   Update On 2019-02-21 08:58 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபிட் சாதனம் பல்வேறு அதிநவீன உடல்நலன் சார்ந்த அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #GalaxyFit



சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் தவிர, கேலக்ஸி ஃபிட் மற்றும் ஃபிட் இ சாதனங்களையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய சாதனம் அனைத்து தரப்பிலான உடல்நல ஆர்வலர்களுக்குமானது என சாம்சங் அறிவித்துள்ளது. இந்த சாதனம் இதனை அணிந்திருப்பவர் நடப்பது, ஓடுவது, பைக்கில் செல்வது போன்ற நடவடிக்கைகளை தானாக கண்டறிந்து அதற்கான விவரங்களை சேகரிக்கும்.

இத்துடன் 90 வெவ்வேறு நடவடிக்கைகளை சாம்சங் ஹெல்த் செயலியில் இருந்து தானாகவும் தேர்வு செய்து கொள்ளலாம். பயனர் தேர்வு செய்ததை வைத்து கேலக்ஸி ஃபிட் தானாக உடற்பயிற்சியை டிராக் செய்ய துவங்கிடும். இத்துடன் மேம்பட்ட உறக்க கண்காணிப்பு வசதியும், மன அழுத்தத்தை கண்காணிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஃபிட் டிராக்கர் மிக எளிய மற்றும் பயன்தரும் யு.எக்ஸ். கொண்டிருக்கிறது. டிராக்கர் சேகரிக்கும் விவரங்களை மிக துல்லியமாக ஸ்மார்ட்போனில் பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளது. பயண சமயங்களில் வெளியூர்களுக்கு ஏற்ற நேரத்தை வழங்க இரு கடிகார வசதி வழங்கப்பட்டுள்ளது.



கேலக்ஸி ஃபிட் 0.95 இன்ச் 120x240 பிக்சல் ரெசல்யூஷன் ஃபுல் கலர் AMOLED டிஸ்ப்ளே, 512 கே.பி. ரேம், 32 எம்.பி. ரோம் வழங்கப்பட்டுள்ளது.  இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்தவரை ப்ளூடூத், ஹெச்.ஆர்.எம்., அக்செல்லோமீட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

70 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்பட்டிருக்கும் கேலக்ஸி ஃபிட் 5 ATM வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL-STD 810G ராணுவ தரம் கொண்டிருக்கிறது. இரு ஆக்டிவிட்டி டிராக்கர்களும் ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கும் அதிக இயங்குதளங்களில் இணைந்து வேலை செய்யும். 

கேலக்ஸி ஃபிட் பிளாக் மற்றும் சில்வர் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,108) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மே 31 ஆம் தேதி துவங்குகிறது. கேலக்ஸி ஃபிட் இ மாடல் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Tags:    

Similar News