செய்திகள்
மயிலாடுதுறையில் உதவி கலெக்டர் மகாராணி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட போது எடுத்த படம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 383 வாக்காளர்கள்

Published On 2021-01-21 04:33 GMT   |   Update On 2021-01-21 04:33 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 383 வாக்காளர்கள் உள்ளனர் என்று உதவி கலெக்டர் மகாராணி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 3 சட்ட மன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் மகாராணி வெளியிட்டார்.

அதனை அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளான அ.தி.மு.க. நகர செயலாளர் நாஞ்சில் கார்த்தி, தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் வக்கீல் ராம.சேயோன், பா.ஜ.க. நகர தலைவர் மோடி கண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில், 1 லட்சத்து 21 ஆயிரத்து 166 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 23 ஆயிரத்து 841 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 15 பேர் என மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 22 வாக்காளர்கள் உள்ளனர்.

சீர்காழி (தனி) தொகுதியில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 899 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 868 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 12 பேர் என மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 779 வாக்காளர்கள் உள்ளனர்.

இதேபோல பூம்புகார் தொகுதியில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 862 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 39 ஆயிரத்து 713 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர் 7 பேர் என மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 582 வாக்காளர்கள் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 7 லட்சத்து 72 ஆயிரத்து 383 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News