வழிபாடு
திருத்தணி முருகன் கோவில்

திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டு தரிசனம் ரத்து

Published On 2021-12-24 05:17 GMT   |   Update On 2021-12-24 07:50 GMT
திருத்தணி முருகன் கோவிலில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ந்தேதி ஆகிய 2 நாட்களில் கோவிலில் நடைபெறும் பஜனைகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில் மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 365 படிகள் உள்ளன. ஒரு வருடத்தை குறிக்கும் வகையில் இருப்பதால் இந்த கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் திருப்புகழ் திருப்படி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த விழாவில் பல்வேறு பஜனை குழுவினர் பங்கேற்று ஒவ்வொரு படியிலும் சிறப்பு பூஜைகள் செய்து பாடல்களை பாடியவாறு கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

இந்த ஆண்டுக்கான திருப்புகழ் திருப்படி திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் திருத்தணியில் நடைபெற்றது. திருத்தணி கோட்டாட்சியர் சத்யா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவில் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டிசம்பர் 31-ந்தேதி நள்ளிரவு புத்தாண்டு தரிசன நிகழ்ச்சியை ரத்து செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ந்தேதி ஆகிய 2 நாட்களில் கோவிலில் நடைபெறும் பஜனைகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.

டிசம்பர் 31-ந்தேதி காலை 11 மணிக்கும் ஜனவரி 1-ந்தேதி இரவு 8 மணிக்கும் தங்கத்தேர் வீதி உலா நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News