செய்திகள்
டிரென்ட் போல்ட்

எங்களை பாதுகாப்பாக சொந்தநாடு அனுப்பி வைத்த மும்பை அணிக்கு நன்றி: டிரென்ட் போல்ட்

Published On 2021-05-09 11:16 GMT   |   Update On 2021-05-09 11:16 GMT
மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய அனைத்து வெளிநாட்டு வீரர்களும் அவரவர் வீடுகளுக்கு சென்றடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிரித்து வந்த நிலையில், கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்ப விரும்பினர்.

ஐபிஎல் அணி நிர்வாகம் வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக சொந்த நாடு திரும்ப ஏற்பாடு செய்தது. இந்தியாவில் இருந்து பெரும்பாலானா நாடுகளுக்கு நேரடி விமான போக்குவரத்து கிடையாது. இதனால் வேறு நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

நியூசிலாந்து வீரர்கள் டோக்கியோ சென்று அங்கிருந்து சொந்த நாடு சென்றார்கள். தற்போது வீரர்கள் தங்களுடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய டிரென்ட் போல்ட் வீட்டிற்கு சென்றுவிட்டார். மற்ற வீரர்களும் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் பாதுகாப்பாக சொநத் ஊர் அனுப்பி வைத்ததற்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரென்ட் போல்ட் நன்றி தெரிவித்துள்ளார்.

டிரென்ட் போல்ட் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் ‘‘ஐபிஎல் போட்டி முடிவுக்கு வந்து நான் கவலையாக சொந்த நாடு திரும்பிய நிலையில், என்னுடைய இதயம் இந்திய மக்களை நோக்கிய செல்கிறது. தற்போதைய நிலையில் ஏராளமான மக்கள் பாதிக்கப்படும்போது, இதுனுடன் எதையும் ஒப்பிட இயலாது.

ஒரு கிரிக்கெட்டராகவும், மனிதராகவும் இந்தியா எனக்கு ஏராளமானவற்றை கொடுத்துள்ளது. என்னுடைய இந்திய ரசிகர்களிடம் இருந்து ஏராளமாக ஆதரவை பெற்றுள்ளேன். இது ஒரு துயரமான சம்பவம். இந்த நிலை விரைவில் மாறும் என நம்புகிறேன். என்னால் முடிந்தவரை இந்த அழகான நாட்டிற்கு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எங்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்ததற்காக மும்பை இந்தியன்ஸ்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தயது செய்து கவனமான இருங்கள். நன்றாக வலிமையான பிறகு பார்ப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News