ஆட்டோமொபைல்
எம்ஜி குளோஸ்டர்

ஆட்டோனோமஸ் லெவல் 1 வசதியுடன் எம்ஜி குளோஸ்டர் அறிமுகம்

Published On 2020-10-09 11:04 GMT   |   Update On 2020-10-09 11:04 GMT
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது எம்ஜி குளோஸ்டர் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.


எம்ஜி மோட்டார் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் குளோஸ்டர் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் துவக்க விலை ரூ. 28.98 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எம்ஜி குளோஸ்டர் மாடல் சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் சேவி மாடல் விலை ரூ. 35.38 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்பதிவு துவங்கிவிட்ட நிலையலில், விரைவில் விநியோகம் செய்யப்படும் என தெரிகிறது.



புதிய ஏழு பேர் அமரக்கூடிய குளோஸ்டர் மாடல் ஆட்டோனோமஸ் லெவல் 1 வசதி கொண்ட இந்தியாவின் முதல் கார் ஆகும். இதில் ஆட்டோமேடிக் பார்க்கிங் அசிஸ்ட், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங், பார்வேர்டு கொலிஷன் வார்னிங், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், லேண் டிபாச்சர் வார்னிங் போன்ற வசதிகள் உள்ளன.

எம்ஜி குளோஸ்டர் மாடல் அனைத்து வேரியண்ட்களிலும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு  உள்ளது. எனினும், இவை ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ப டியூனிங் செய்யப்படுகின்றன. இவற்றுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 
Tags:    

Similar News