செய்திகள்
கோப்புப்படம்

டயர், பிளாஸ்டிக் பொருட்களை கொளுத்த வேண்டாம்- மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

Published On 2021-01-12 05:41 GMT   |   Update On 2021-01-12 05:41 GMT
போகி பண்டிகையின் போது ரப்பர், பழைய டயர், டியூப், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை:

போகி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.

போகி பண்டிகை தினத்தில், வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழிப்பதற்காக அவற்றை எரிப்பார்கள். அப்போது சிறுவர்கள் சிறிய மேளங்களை கொட்டி ஆரவாரம் செய்வார்கள்.

இதில் டயர், பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களை எரிப்பதால் கரும்புகை ஏற்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சுவாசிக்க சிரமம் ஏற்படுகிறது.

இதை தவிர்க்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது.-

போகி பண்டிகையின் போது ரப்பர் பொருட்கள், பழைய டயர், டியூப், பிளாஸ்டிக், ரசாயனம் கலந்து பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

அந்த பொருட்களில் இருந்து வெளிப்படும் நச்சுப் புகையால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்படும். எனவே, இது போன்ற பொருட்களை எரிப்பதை தவிர்த்து போகி கொண்டாட வேண்டும்.

போகி பண்டிகையின் போது காற்று மாசு ஏற்படுவது குறித்து கண்காணிக்கப்படும். 15 இடங்களில் காற்றின் தரம் கண்டறியப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News