தொழில்நுட்பம்
ஆப்பிள்

ஏழு மாநிலங்களில் ஸ்டோர்களை மீண்டும் மூடும் ஆப்பிள்

Published On 2020-07-02 05:40 GMT   |   Update On 2020-07-02 05:40 GMT
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் இயங்கி வரும் சுமார் 24 விற்பனை மையங்களை மீண்டும் மூடுவதாக அறிவித்து இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியா மற்றும் அமெரிக்காவின் இதர மாநிலங்களில் செயல்பட்டு வரும் விற்பனை மையங்களை மீண்டும் மூடுவதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்ட ஆப்பிள் ஸ்டோர்களின் எண்ணிக்கை 77 ஆக இருக்கிறது.

அமெரிக்காவின் அலபாமா, ஜார்ஜியா, ஐடாஹோ, லூசியானா, நெவேடா மற்றும் ஒக்லஹோமா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விற்பனை மையங்கள் மூடப்படுகின்றன. ஏற்கனவே ஃபுளோரிடா, மிசிசிப்பி, டெக்சாஸ் மற்றும் யுட்டா போன்ற பகுதிகளில் செயல்பட்டு வந்த ஆப்பிள் விற்பனை மையங்கள் மூடப்பட்டன.
 
விற்பனை மையங்களை திறப்பது மற்றும் மூடுவதற்கான வழிமுறைகளை ஒவ்வொரு நகரத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து வருகிறது. தற்சமயம் செயல்பட்டு வரும் ஆப்பிள் ஸ்டோர்களுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்பட இதர சோதனைகள் மற்றும் அடிக்கடி சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சில பகுதிகளில் மூடப்பட்டு இருந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் ஆப்பிள் ஸ்டோர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஆப்பிள் விற்பனையகங்கள் மூடப்பட்டாலும், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News