செய்திகள்
விவசாயம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விதிகள் வரையறுக்கப்படவில்லை- தமிழக அரசு

Published On 2020-08-05 10:41 GMT   |   Update On 2020-08-05 10:41 GMT
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக விதிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்டது. தஞ்சை, திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான இடங்கள் இந்த பகுதிக்குள் அடங்கும்.

மணம் குவாரி தொடர்பான வழக்கு ஒன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக விதிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை" என தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News