தொழில்நுட்பம்
ஃபேஸ்புக்

கொரோனா காலத்தில் அக்கறை காட்ட புதிய ‘கேர்’ ரியாக்ஷன் வெளியிட்ட ஃபேஸ்புக்

Published On 2020-04-18 06:51 GMT   |   Update On 2020-04-18 06:51 GMT
ஃபேஸ்புக் நிறுவனம் தனது தளங்களில் பயனர்கள் மற்றவர்களுக்கு அக்கறையை வெளிப்படுத்த புதிதாக கேர் ரியாக்ஷன் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.



ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக கேர் ரியாக்ஷன் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனா காலத்தில் மக்கள் தங்களது அக்கறையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும். இதே ரியாக்ஷன் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரியாக்ஷன் அடுத்த வாரம் முதல் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதை வெளியிடும் பணிகள் துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக் தளத்தில் ஏற்கனவே ஆறு ரியாக்ஷன்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய கேர் ரியாக்ஷன் ஏழாவதாக அமைந்துள்ளது. 

புதிய கேர் ரியாக்ஷன் வெளியிடப்பட்டு இருப்பதை ஃபேஸ்புக் நிறுவன அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்து இருக்கிறார். புதிய ரியாக்ஷன் ஃபேஸ்புக் பதிவு, புகைப்படம், வீடியோ மற்றும் கமென்ட் உள்ளிட்டவற்றில் பயன்படுத்த முடியும்.  



இந்த சமயத்தில் இது தேவையற்றது என தெரியும், எனினும் பயனர்கள் தங்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்களை நினைத்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவூட்ட இது உதவியாக இருக்கும் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்ப தகவல் தொடர்பு மேலாளர் அலெக்சான்ட்ரூ வொய்கா தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

புதிய கேர்  ரியாக்ஷன் முகம் ஒன்றை இதயத்தை கட்டுத்தழுவது போன்று அனிமேட் ஆகிறது. 

மெசஞ்சர் செயலியில் இந்த ரியாக்ஷன் வழங்கப்படுகிறது. முதலில் சாட் பாக்ஸ் இல் ஹார்ட் ரியாக்ஷனை பதிவிட்டுபின் கீழ்புறமாக அழுத்தி பிடித்தால் புதிய ரியாக்ஷனை பார்க்க முடியும். பின் இரு ரியாக்ஷன்களில் தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
Tags:    

Similar News