ஆட்டோமொபைல்
ஹீரோ எலெக்ட்ரிக்

நாடு முழுக்க 10 ஆயிரம் சார்ஜிங் மையங்கள் - ஹீரோ எலெக்ட்ரிக் அதிரடி

Published On 2021-09-26 08:01 GMT   |   Update On 2021-09-26 08:01 GMT
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் சார்ஜிங் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த புது திட்டம் தீட்டி இருக்கிறது.

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியா முழுக்க சுமார் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கென ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் டெல்லியை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான மேசிவ் மொபிலிட்டி-யுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவை கனெக்டெட் நெட்வொர்க் முறையில் இரண்டு மற்றும் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும்.



கிளவுட் சார்ந்த உள்கட்டமைப்புகளை கொண்டு எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை உருவாக்குவதில் மேசிவ் மொபிலிட்டி நிறுவனம் சிறந்து விளங்குகிறது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்துடனான கூட்டணியில் உருவாகும் சார்ஜிங் மையங்கள் ஒருங்கிணைந்த சார்ஜிங் அனுபவத்தை வழங்கும்.

இதற்கென இரு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன பயனர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ளும் வகையில் ஆய்வு மேற்கொண்டன. இதில் பெரும்பாலான பயனர்கள் இணையத்தில் கண்டறியக்கூடிய ஸ்மார்ட் சார்ஜர்களை விரும்புகின்றனர் என தெரியவந்துள்ளது. இத்துடன் யு.பி.ஐ. சார்ந்த கட்டண முறையையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.
Tags:    

Similar News