செய்திகள்
முதல்வர் பழனிசாமி.

வேளாண் மசோதாவை அரசியல் ஆக்குகிறார் முக ஸ்டாலின்- முதல்வர் பழனிசாமி கண்டனம்

Published On 2020-09-19 13:08 GMT   |   Update On 2020-09-19 13:08 GMT
வேளாண் மசோதாக்களை எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் அரசியலாக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

வேளாண் மசோதாக்களை எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் அரசியலாக்குகிறார். தமிழக விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் வகையில் வேளான் திட்டங்கள் உள்ளன. வேளாண் சட்டங்களால் விவசாயிகள், கொள்முதல் செய்வோர் என இருவர் நலனும் பாதுகாக்கப்படும். கிராமப்புறங்களில் உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் பெருகி வேலைவாய்ப்பு ஏற்படும். 

தமிழகத்தில் கரும்பு கோகோ சாகுபடி கோழிப்பண்ணை போன்றவற்றில் ஏற்கனவே ஒப்பந்த முறை உள்ளது. விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு போட்டி முறையில் நல்ல விலை பெறுவது உறுதி செய்யப்படும். 

குறைந்த ஆதரவிலை அடிப்படையில் நடைபெற்று வரும் நெல் கொள்முதல் எவ்விதத்திலும் பாதிக்காது. மத்திய அரசின் மசோதா உணவுப் பொருட்களை பதுக்கப்படுவதை தடுக்க வழி செய்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News