ஆட்டோமொபைல்
ஹூன்டாய் கிரெட்டா

முதல் முறையாக சோதனையில் சிக்கிய 2020 ஹூனாடாய் கிரெட்டா

Published On 2019-08-08 10:42 GMT   |   Update On 2019-08-08 10:42 GMT
ஹூன்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



2020 ஹூன்டாய் கிரெட்டா கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் முதல் முறையாக இணையத்தில் லீக் ஆகியுள்ளது. ஹூன்டாய் கிரெட்டா கார் ஹூன்டாயின் iX25 எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி. ஏற்கனவே சீனா மற்றும் தென் கொரியாவில் சோதனை செய்யப்படுகிறது.

அந்த வகையில் இந்தியாவில் இது முதல்முறையாக சோதனை செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் கிரெட்டா எஸ்.யு.வி. அதிகம் விற்பனையாகும்  மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா எஸ்.யு.வி. 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கியா மோட்டார்ஸ் மற்றும் எம்.ஜி. மோட்டார் நிறுவன வாகனங்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய கிரெட்டா மாடல் ஏற்கனவே சீனாவில் விற்பனையாகும் iX25 மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதே போன்று புதிய மாடலும் தற்போதைய iX25 மாடலை தழுவியே உருவாக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.



புதிய ஸ்பை படங்கள் தெளிவற்ற நிலையில் இருப்பதால், இதில் கார் எப்படி காட்சியளிக்கும் என்பது பற்றி அதிக விவரங்கள் தெரியவில்லை. எனினும், இது ஏற்கனவே சீனாவில் விற்பனை செய்யப்படுவதால் இது ஹூன்டாய் வென்யூ காரின் பெரிய வெர்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

காரின் முன்புறம் பெரிய கேஸ்கேட் கிரில், ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் கிரில் பகுதியின் இருபுறங்களிலும் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படலாம். பின்புறம் அதிகளவு மாற்றங்கள் இன்றி iX25 போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.

புகைப்படம் நன்றி: indianautosblog
Tags:    

Similar News