செய்திகள்
கோப்புபடம்

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் விபத்து அபாயம்

Published On 2021-07-21 09:09 GMT   |   Update On 2021-07-21 09:09 GMT
தளி ரோட்டில் போடிபட்டியில் இருந்து மூணாறு, திருமூர்த்திமலை செல்லும் சாலையின் ஓரத்தில் மற்றும் மழை நீர் ஓடைகளை ஆக்கிரமித்து கழிவுகள் கொட்டப்படுகிறது.
உடுமலை:

உடுமலை நகரின் புறநகர பகுதியான உடுமலை-பொள்ளாச்சி சாலையில் கட்டிட கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் இறைச்சி, மீன் கழிவுகள், குப்பை கொட்டப்படுகிறது. சாலையின் இரு புறமும் மலைபோல் காணப்படும் கழிவுகளால் சாலையின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்படுகிறது.

அதோடு பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு விபத்துக்களும் ஏற்படுகிறது. அதேபோல் தாராபுரம் சாலையில் புறநகர பகுதியில் இரு புறமும், பிளாஸ்டிக் கழிவுகள், உடைந்த கண்ணாடிக்கழிவுகள், அருகில் உள்ள தொழிற்சாலையில் இருந்து பஞ்சு மற்றும் அபாயகரமான கழிவுகள் கொட்டப்படுகிறது.

தளி ரோட்டில் போடிபட்டியில் இருந்து மூணாறு, திருமூர்த்திமலை செல்லும் சாலையின் ஓரத்தில் மற்றும் மழை நீர் ஓடைகளை ஆக்கிரமித்து கழிவுகள் கொட்டப்படுகிறது. எனவே சாலையோரங்களில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் அத்துமீறி கழிவுகளை கொண்டு வந்து குவிக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News