செய்திகள்
டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை: 25 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி கேட்கும் பிசிசிஐ, எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு

Published On 2021-09-27 11:21 GMT   |   Update On 2021-09-27 11:21 GMT
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நேரடியாக காண அதிகமான ரசிகர்களுக்கு அனுமதி வழங்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்திடம் கேட்டுள்ளது பி.சி.சி.ஐ.
இந்தியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்தது. இந்தியாவில் 2-வது அலை கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது ஐ.சி.சி. போட்டியை நடத்த தயங்கியது. இதனால் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்த ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. ஏற்பாடு செய்தன. அந்த வகையில் அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

தற்போது துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண 25 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பிசிசிஐ மட்டும் எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு ஆகியவை இரண்டு ஐக்கிய அரபு அமீரக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யு.ஏ.இ. அரசு அனுமதி அளித்தால் டி20 உலகக் கோப்பை 25 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெறும்.
Tags:    

Similar News