உள்ளூர் செய்திகள்
பூங்கா அளவிடும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

பூங்கா அளவிடும் பணி தொடக்கம்

Published On 2022-05-07 10:15 GMT   |   Update On 2022-05-07 10:15 GMT
குமாரபாளையத்தில் சர்ச்சைக்குரியை பூங்காவை அளவிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம்-கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் சில ஆண்டுகள் முன்பு பூங்கா அமைக்கப்பட்டது. இந்த இடம் தன்னுடைய இடம் என காவல்துறையில் பணியாற்றும் ஒருவர் உரிய ஆவணங்களுடன் வருவாய்த்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

அதன்படி பூங்கா அளவிடும் பணி முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து, வி.ஏ.ஒ. தியாகராஜன் முன்னிலையில் தொடங்கியது. இது பற்றி முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து கூறுகையில், 
இந்த இடத்தின் உரிமையாளர் பல வருடங்களாக வெளியூரில் இருந்ததால், இந்த இடம் குறித்து அவரால் அறிய முடியவில்லை. பல வருடங்களாக இடம் யாரும் பயன்படுத்தப்படாமல் இருந்ததால், அரசு நிலம் என்று எண்ணி பூங்கா அமைக்கப்பட்டது.

 இந்த இடத்தை தனக்கு கொடுக்க சொல்லி ஊராட்சி நிர்வாகத்திற்கு இடத்தின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். பூங்கா அமைக்க செலவான சுமார் 25 லட்சம் ரூபாயை அரசு வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலர் செய்வதறியாது இருந்து வருகின்றனர் என்றார்.
Tags:    

Similar News