செய்திகள்
ஷாகிப் அல் ஹசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முஸ்தாபிகுர் ரஹ்மான்

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சாதனை படைத்த ஷாகிப் அல் ஹசன்

Published On 2021-10-17 16:55 GMT   |   Update On 2021-10-17 16:55 GMT
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் பெற்றுள்ளார்.
அல் அமீரத்:

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கிய நிலையில், முதல் சுற்று லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. வங்கதேசம் அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன்,  2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை வீரர் மலிங்காவின் சாதனையை முறியடித்தார். 

மொத்தம் 80 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள ஷாகிப் அல் அசன், மொத்தம் 108 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். மலிங்கா 107 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

20 ஓவர்  கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் பெற்றுள்ளார். உலக சாதனை படைத்த ஷாகிப் அல் ஹசனுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

இதேபோல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில்  800 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார்.

Tags:    

Similar News