செய்திகள்
தேர்வு அறைக்குள் சமூக இடைவெளியுடன் தேர்வு எழுதியோரை காணலாம்

குரூப்-1 தேர்வு சற்று கடினமாகவே இருந்தது- தேர்வு எழுதியவர்கள் கருத்து

Published On 2021-01-04 02:33 GMT   |   Update On 2021-01-04 02:33 GMT
‘குரூப்-1 முதல்நிலை தேர்வு சற்று கடினமாகவே இருந்தது’ என தேர்வு எழுதியவர்கள் கருத்து தெரிவித்தனர்.
சென்னை:

குரூப்-1 முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. ஒவ்வொரு முறை இதுபோன்ற தேர்வு நடப்பதற்கு முன்பாக எந்தெந்த பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்? எத்தனை தொகுப்புகளாக கேள்விகள் இடம் பெற்றிருக்கும்? என்பது போன்ற மாதிரி வினாத்தாள் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்தால் வெளியிடப்படும். ஆனால் தற்போது நடந்த குரூப்-1 தேர்வுக்கு முன்பாகவே வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள் போல இல்லாமல் சற்று வித்தியாசமானதாக இருந்ததாகவும், தேர்வு கொஞ்சம் கடினமானதாக இருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மத்திய-மாநில அரசுகளின் சமீபத்திய நிகழ்வுகள், திட்டங்களை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு மட்டுமே இத்தேர்வு எளிதாக அமைந்திருக்கும் என தேர்வர்கள் கூறினர். கொரோனா தொடர்பாக 6 கேள்விகள் இடம் பெற்று இருந்தது எனவும், நீதி கட்சிகள் மற்றும் பெரியார் குறித்த கேள்விகள் அதிகம் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

முக்கியமாக 2 வினாக்களுக்கு கொடுக்கப்பட்ட பதில்களில் சரியான விடை இல்லை என்று தேர்வர்கள் தெரிவித்தனர்.

நடப்பு நிகழ்வுகள் எனும் தலைப்பில் ‘பரியேறும் பெருமாள் என்ற தமிழ் படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்’ என்ற கேள்வி வித்தியாசமாக இடம்பெற்றிருந்ததாகவும் தேர்வர்கள் குறிப்பிட்டனர்.

குரூப்-1 தேர்வை பொறுத்தவரையில் முதல்நிலை தேர்வில் இருந்து முதன்மை தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு இருப்பதாகவே கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News