தொழில்நுட்பச் செய்திகள்
டிடிஹெச்

டிவி சேனல்களுக்கு திடீர் விலை குறைப்பு-அறிவிப்பை வெளியிட்ட பிரபல டிடிஹெச் நிறுவனம்

Published On 2022-03-07 05:42 GMT   |   Update On 2022-03-07 05:42 GMT
ஓடிடியை நோக்கி செல்லும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
டாடா பிளே நிறுவனம் தனது டிடிஹெச் சேனல் பேக்குகளின் விலையை திடீரென குறைத்துள்ளது.

டாடா ஸ்கை என்ற பெயரில் இயங்கி வந்த டிடிஹெச் சேவை நிறுவனம் சில மாதங்களுக்கு முன் டாடா பிளே என பெயரை மாற்றியது. 
இந்தியாவில் டாடா பிளே வாடிக்கையாளர்களாக 1.9 கோடி பேர் உள்ளனர்.

இந்நிலையில் அந்த நிறுவனம் தற்போது தனது சேனல் பேக்குகளின் விலையை குறைத்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.30 முதல் ரூ.100 வரை சேமிக்கலாம் என தெரிவித்துள்ளது.



இந்த விலை குறைப்பு ஓவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் வேறுபடும். வாடிக்கையாளர்கள் எந்தெந்த சேனல்களை அதிகம் பார்க்கின்றனர் என்பதை அறிந்து, அவர்கள் பார்க்காத சேனல்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையளர்கள் தாங்கள் விரும்பி பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் விலை கொடுத்தால் போதும் என்ற வசதி தரப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹரித் நாக்பால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இன்று ஓடிடி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஒடிடி நோக்கி செல்லும் டிடிஎச் வாடிக்கையாளர்களை தக்கவைத்துகொள்ள டாடா பிளே விலை குறைப்பு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News