செய்திகள்
கோப்புபடம்

தமிழகத்தில் 6 மாதங்களில் 1,672 போக்சோ வழக்குகள் பதிவு - காவல்துறை மானிய கோரிக்கையில் தகவல்

Published On 2021-09-09 13:14 GMT   |   Update On 2021-09-09 13:14 GMT
2019-ம் ஆண்டு போக்சோ கற்பழிப்பு வழக்குகள் மட்டும் 1742 வழக்குகளும் மற்றவை 654 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.

சென்னை:

சட்டசபையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை, தமிழ்நாடு காவல் துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

*ராணிப்பேட்டை திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்களில் மாவட்ட காவல் அலுவலகம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

*நாகப்பட்டினம் மாவட்டம் ஆற்காடுதுறை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டின மற்றும் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் ஆகிய இடங்களில் 3வது படகுதளம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்

மாநில காவல் நவீன கட்டுப்பாட்டு அறை மற்றும் அவசரகால உதவி மையத்திற்கு இந்திய தர சான்றிதழ் பெறும் பணி விரைவில் நிறைவடையும்.

தமிழகத்தில் 14 கணினி இணைப்பு கட்டுப்பாடுகள் இருக்கக் கூடிய நவீன தரவுத்தளம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 82 லட்சம் அவசரகால அழைப்புகளின் விவரங்களும், 13 லட்சம் “காவலன்” செயலி பயன்படுத்துவோரின் தகவல்களும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்த மையத்திற்கு இந்திய தர சான்றிதழ் (ஐ.எஸ்.ஓ. 27001 )பெறும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் விரைவில் நிறைவடையும்.

* தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தற்போதுள்ள 1985-ம் ஆண்டு சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்படும்.

2019-2021 ஜூன வரையில் 7158 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இதில் 2019-ம் ஆண்டு போக்சோ கற்பழிப்பு வழக்குகள் மட்டும் 1742 வழக்குகளும் மற்றவை 654 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. 2020 ஆண்டு போக்சோ கற்பழிப்பு வழக்குகள் 2229 மற்றவை 861 பதியப்பட்டுள்ளது.

2021 ஜூன் வரை போக்சோ கற்பழிப்பு வழக்குகள் 1252, மற்றவை 420 பதியப்பட்டுள்ளது. மொத்தமாக 2019-ம் ஆண்டு 2396 வழக்குகளும், 2020-ம் ஆண்டு 3,090 வழக்குகளும், 2021 ஜூன் வரை 1,672 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.

Tags:    

Similar News