செய்திகள்
கோப்புப்படம்

திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து இசை நிகழ்ச்சி - பிரபல கலைஞர்கள் பங்கேற்பு

Published On 2021-01-09 22:19 GMT   |   Update On 2021-01-09 22:19 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பிரபல இசைக்கலைஞர்கள், நடிகர்-நடிகைகள் விவசாயிகளுக்கு நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். அந்தவகையில் பிரபல இசைக்கலைஞர்கள், நடிகர்-நடிகைகள் விவசாயிகளுக்கு நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

குறிப்பாக டெல்லியின் திக்ரி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அங்கு இசை நிகழ்ச்சி ஒன்றை அவர்கள் நிகழ்த்தினர். இதில் பிரபல நடிகை ஸ்வரா பாஸ்கர், இசைக்கலைஞர்கள் ரப்பி ஷெர்கில், ஹர்பஜன் மன் உள்பட பலரும் பங்கேற்று விவசாயிகளுக்கு உற்சாகம் ஊட்டினார்கள்.

இது குறித்து ஸ்வரா பாக்ஸ்கர் கூறுகையில், ‘நான் ஒரு கலைஞராக, குடிமகளாக, கிராமங்களை அறியாத நகரவாசிகளின் பிரதிநிதியாக இங்கு வந்திருக்கிறேன். அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் போராட வேண்டும்’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News