உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தேங்காய் பருப்பு விலை குறைவால் விவசாயிகள் கவலை

Published On 2022-01-19 09:10 GMT   |   Update On 2022-01-19 09:10 GMT
தேங்காய் பருப்பின் விலை குறைந்து வருவதால் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் இருந்து தேங்காய்கள் முத்தூர் வேளாண்மை கூடத்திற்கு அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேங்காய் பருப்பு தற்போது ஒரு கிலோ 85 ரூபாய் என்ற நிலையில் தேங்காயின் விலையும் குறைந்துள்ளது. தேங்காய் ஒரு கிலோ 25 முதல் 27 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை தைப்பொங்கலை முன்னிட்டு முத்தூர் வேளாண்மை கூடம் விடுமுறை விடப்பட்டு இருந்தது. 

கடந்த வாரத்துக்கு முன்பு 5,911 தேங்காய்கள் மட்டுமே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தேங்காய் பருப்பின் விலை குறைந்து வருவதால் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News