ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலுக்கு அபிஷேக தீர்த்தம் கொண்டு வருவதில் சிரமம்

பழனி முருகன் கோவிலுக்கு அபிஷேக தீர்த்தம் கொண்டு வருவதில் சிரமம்

Published On 2020-09-08 06:14 GMT   |   Update On 2020-09-08 06:14 GMT
பழனியில் மழை பெய்து வருவதால் இந்த பாதையானது சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே தீர்த்தம் எடுத்து வருவதில் கடும் சிரமம் உள்ளதாக மிராஸ் பண்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
பழனி முருகன் கோவிலில் மூலவருக்கு தினமும் 6 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு ஒவ்வொரு கால பூஜைக்கும் தேவையான அபிஷேக தீர்த்தத்தை பழனி கோவில் 64 மிராஸ் பண்டாரங்கள் தினமும் எடுத்து வருகின்றனர். இதற்காக இவர்கள், சிவகிரிப்பட்டி மருத்துவநகர் அருகே உள்ள வரட்டாறு நந்தவனத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து நடந்தே கிரிவீதி வந்து அங்கிருந்து மலைக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் நந்தவனத்தில் இருந்து கிரிவீதி வருவதற்கான பாதை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது பழனியில் மழை பெய்து வருவதால் இந்த பாதையானது சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே தீர்த்தம் எடுத்து வருவதில் கடும் சிரமம் உள்ளதாக மிராஸ் பண்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பழனி முருகன் கோவிலுக்கு தேவையான அபிஷேக தீர்த்தம் எடுத்து வருவதற்கான நந்தவனம்-கிரிவீதி பாதை சேறும், சகதியுமாக உள்ளது. இதுகுறித்து சிவகிரிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் இந்த பாதையை சீரமைக்க கோவில் நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News