தொழில்நுட்பம்
டிம் குக்

வழக்கு விசாரணையில் பதில் அளிக்க பயிற்சி எடுக்கும் ஆப்பிள் சிஇஒ டிம் குக்?

Published On 2021-05-18 11:02 GMT   |   Update On 2021-05-18 11:02 GMT
ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வேண்டுமென்றே பாகுபாடு காட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நிறுவன சிஇஒ விளக்கம் அளிக்க இருக்கிறார்.

உலகளவில் மிகவும் பிரபலமான கேம்களில் ஒன்றாக போர்ட்நைட் இருக்கிறது. இதனை எபிக் கேம்ஸ் எனும் நிறுவனம் உருவாக்கியது. ஆப் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் சாதனங்களில் செயலிகளை பட்டியலிடுவதில் ஆப்பிள் நிறுவனம் பாகுபாடு காட்டுவதாக எபிக் கேம்ஸ் குற்றஞ்சாட்டியது மட்டுமின்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

வழக்கு விசாரணையில் பங்கேற்று ஆப்பிள் தரப்பில் விளக்கம் அளிக்க அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளான பில் ஸ்கில்லர் மற்றும் க்ரியக் பெடரிகி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதோடு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்த வாரமோ அல்லது அடுத்த வாரத்திலோ வழக்கு விசாரணையில் கலந்து கொண்டு பதில் அளிக்க இருக்கிறார்.



இந்த நிலையில், வழக்கு விசாரணையில் பதில் அளிக்க டிம் குக் பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென முன்னாள் வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவை டிம் குக் சட்ட வல்லுநர் குழு நியமித்து இருப்பதாக கூறப்படுகிறது. பயிற்சியின் போது பல கட்டங்களில் நடைபெறும் என தெரிகிறது.

விசாரணையின் போது ஆப் ஸ்டோர் நடவடிக்கைகளை டிம் குக் ஆதரித்து பதில் அளிப்பார் என கூறப்படுகிறது. இந்த விசாரணை மொத்தத்தில் 100 நிமிடங்களுக்கு நடைபெறும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News