ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் ரத்து ஏன்? என்பதற்கான காரணம்

Published On 2020-09-14 09:16 GMT   |   Update On 2020-09-14 09:16 GMT
திருப்பதியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் இலவச தரிசன டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது, வெண்டுமென்றே நிறுத்தி வைக்கப்படவில்லை. கொரோனா பரவல் குறைந்ததும், இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அலிபிரி பூதேவி காம்ப்ளக்சில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டது. வருகிற 30-ந்தேதி வரை அங்கு டோககன் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு தரப்பினரும், பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புரட்டாசி மாதம் வருவதால் அதிகளவில் தமிழக பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். தற்போது தமிழர்களும் கோவிலுக்கு வர முடியவில்லை. எனவே பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு திருப்பதி தேவஸ்தானம், “திருப்பதியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் இலவச தரிசன டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது, வெண்டுமென்றே நிறுத்தி வைக்கப்படவில்லை. கொரோனா பரவல் குறைந்ததும், இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும். அதுவரை பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News