ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் பிரம்மோற்சவ நாட்களில் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு வெளியீடு

Published On 2020-09-08 06:14 GMT   |   Update On 2020-09-08 06:14 GMT
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நாட்களில் ஏழுமலையானை வழிபட சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வருகிற 19-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி வருகிற 15-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

இந்நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் இதுவரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் தேவஸ்தான இணையதள முகவரியான https://ttdsevaonline.com டிக்கெட் முன்பதிவு செய்யும் விதமாக வெளியிடப்பட்டது. இதில் பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்தாண்டு பிரம்மோற்சவம் நடைபெற கூடிய நாட்களில் சாமி வீதிஉலா நடைபெறுவது வரலாற்றில் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரங்கநாதர் மண்டபத்தில் பிரம்மோற்சவத்தின் போது சாமி தாயார் எந்தெந்த வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்களோ? அந்த வாகனங்களில் அலங்கரித்து வைக்கப்பட உள்ளனர்.

திருப்பதியில் நேற்று முன்தினம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி செய்தனர். இதனால் கடந்த 5 மாதங்களுக்கு பின்னர் ரூ.1 கோடி உண்டியல் வசூலானது.

நேற்று 12,638 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.1 கோடியே 16 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது. 4029 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
Tags:    

Similar News