செய்திகள்
எம்எஸ் டோனி, ரிக்கி பாண்டிங், மைக் ஹசி

எம்எஸ் டோனியா அல்லது ரிக்கி பாண்டிங்கா?: மைக் ஹசி பார்வையில் யார் சிறந்த ஒருநாள் அணி கேப்டன்

Published On 2019-09-20 15:53 GMT   |   Update On 2019-09-20 15:53 GMT
ஒருநாள் கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங் அல்லது எம்எஸ் டோனி ஆகியோரில் யார் சிறந்த கேப்டன் என்பதை மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் மைக் ஹசி. அதேபோல் ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை டோனியின் தலைமையின் கீழ் வெளிப்படுத்தியுள்ளார்.

ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணிக்கு உலகக்கோப்பையையும், எம்எஸ் டோனி இந்திய அணிக்கும் உலகக்கோப்பையை வாங்கி கொடுத்துள்ளனர்.

இருவரில் யார் சிறந்த ஒருநாள் அணி கேப்டன் என்பது குறித்து மைக் ஹசி கூறுகையில் ‘‘இது கடினமான முடிவுதான். இருந்தாலும், ரிக்கி பாண்டிங்தான் சிறந்த ஒருநாள் அணி கேப்டன் என்று நான்னு சொல்வேன். எம்எஸ் டோனியின் கீழ் ஒருநாள் போட்டியில் விளையாடியது கிடையாது. ஆகவே, ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்துள்ளேன்’’ என்றார்.
Tags:    

Similar News