செய்திகள்
திருமாவளவன்

மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடைவிதிக்க வேண்டும் -திருமாவளவன் மனு

Published On 2019-12-09 10:08 GMT   |   Update On 2019-12-09 10:08 GMT
தமிழகத்தில் மாநராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், மாநகராட்சி தலைவர் போன்ற உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், இந்த அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் போன்ற உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை. இந்த சட்டம் அரசியல் அமைப்புக்கு எதிரானது. எனவே மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News