லைஃப்ஸ்டைல்
நாடிசுத்தி

அரிய பலன் தரும் நாடிசுத்தி

Published On 2021-09-18 02:33 GMT   |   Update On 2021-09-18 02:33 GMT
நாடி சுத்தி செய்வதால் உச்சி முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியம் இருக்கும். உடல் உள் உறுப்புக்கள் நன்கு பிராண ஆற்றல் பெற்று இயங்கும்.
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இடது கை சின் முத்திரை - ஆள்காட்டி விரல் நுனியையும், கட்டை விரல் நுனியையும் இணைக்கவும்.

1. வலது கை கட்டை விரலால் வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து, இடது நாசியிலேயே மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.

2 . பின் வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து வலது நாசியிலேயே மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். மூச்சை வெளிவிடும் பொழுது மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.

3.இப்பொழுது வலது நாசியை கட்டைவிரலால் அடைத்து இடது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து இடது நாசியை மோதிரவிரலால் அடைத்து வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளி விடவும். இதேபோல் மீண்டும் இடதில் இழுத்து வலது நாசியில் மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

4.இப்பொழுது இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து உடன் வலது நாசியை அடைத்து, இடது நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். இதேபோல் வலதில் இழுத்து இடதில் உடன் வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

இப்பொழுது கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கூர்ந்து ஒரு நிமிடம் கவனிக்கவும்.

மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை காலை ஒரு முறை, மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் சாப்பிடுமுன் ஒரு முறை பயிற்சி செய்யுங்கள். உச்சி முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியம் இருக்கும். உடல் உள் உறுப்புக்கள் நன்கு பிராண ஆற்றல் பெற்று இயங்கும். நீரிழிவு, ரத்த அழுத்தம், மன அழுத்தம், கழுத்து வலி, முதுகு வலி போன்ற எந்த நோயும் வராமல் வாழலாம்.
Tags:    

Similar News