செய்திகள்
கொரோனா வைரஸ்

குமரியில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது- ஒரே நாளில் 373 பேருக்கு தொற்று

Published On 2021-04-30 02:39 GMT   |   Update On 2021-04-30 02:39 GMT
குமரியில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் 373 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் இல்லாத பாதிப்பு 2-வது அலையான தற்போது அதிகமாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ஒரு நாளைய பாதிப்பு அதிகபட்சமாக 250-க்குள்ளாகத்தான் இருந்தது.

இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இரண்டு முறை 350-ஐ தாண்டியது. அதாவது கடந்த 26-ந் தேதி 355 பேரும், நேற்று முன்தினம் 373 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

குறிப்பாக குமரி மாவட்டத்துக்கு வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும், சென்னையை சேர்ந்த ஒருவரும், மதுரையை சேர்ந்த ஒருவர் என 16 வெளிமாவட்டத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் பகுதியில் 43 பேரும், கிள்ளியூர் பகுதியில் 25 பேரும், குருந்தன்கோடு பகுதியில் 24 பேரும், மேல்புறம் பகுதியில் 5 பேரும், முன்சிறை பகுதியில் 7 பேரும், நாகர்கோவில் நகரில் 144 பேரும், ராஜாக்கமங்கலம் பகுதியில் 26 பேரும், திருவட்டார் பகுதியில் 19 பேரும், தோவாளை பகுதியில் 40 பேரும், தக்கலை பகுதியில் 24 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் நேற்று முன்தினம் ஒரேநாளில் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 54 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது அலையில் நாகர்கோவில் நகரை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது நகர மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News