லைஃப்ஸ்டைல்
தயிர் நல்லதா? மோர் நல்லதா?

தயிர் நல்லதா? மோர் நல்லதா?

Published On 2019-10-22 07:30 GMT   |   Update On 2019-10-22 07:30 GMT
நமது உணவில் பால், தயிர் மற்றும் மோர் ஆகியன மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலுக்கு தயிர் ஏற்றதா? அல்லது மோர் ஏற்றதா? என பார்ப்போம்.
நமது உணவில் பால், தயிர் மற்றும் மோர் ஆகியன மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலுக்கு தயிர் ஏற்றதா? அல்லது மோர் ஏற்றதா? என பார்ப்போம்.

தயிர்:

தயிரில் குறைவான அளவே நன்மைகள் உள்ளன. தயிர் சாப்பிடுவதனால் உடல் சூடு அதிகரிக்கும்,மலச்சிக்கல் ஏற்படும் மற்றும் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். எனவே, தயிர் சாப்பிடுவதை விட மோர் சாப்பிடுவது நல்லது. மேலும் இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. புளித்த தயிர் சாப்பிடக் கூடாது. புளித்த தயிர் உடலில் பிரச்சனைகளை உண்டாக்கும்.

மோர்:

மோரில் பல வகையான நன்மைகள் உள்ளன. மோர் சாப்பிடுவதன் பயன்கள் பற்றி பார்ப்போம்.

தினமும் மதிய நேரத்தில் மோர் குடித்து வந்தால் உடல் சூடு தனிந்து குளிர்ச்சியாக இருக்கும். வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணக் கோளாறு போன்றவற்றிற்கு மோர் குடிப்பது நல்லது. உடல் சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்பட்டால் மோர் குடிப்பது நல்லது.

தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுத்து விட்டு மீதமுள்ள தயிரில் சரி பங்கு தண்ணீரை சேர்த்து அதனை நன்கு கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தான் சுத்தமான மோர் கிடைக்கும். இதனை நாம் குடிக்கலாம் அல்லது உணவில் சேர்த்தும் சாப்பிடலாம்.

தயிரில் தண்ணீர் கலந்து மோர் என சாப்பிடக் கூடாது. மோர் குடிப்பதனால் நன்கு பசி எடுக்கும். சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் மோர் சாப்பிடக் கூடாது.
Tags:    

Similar News