செய்திகள்
கவுதம் காம்பீர்

இந்தியாவுடன் மோதல் பாகிஸ்தான் அணிக்கு அதிகமான நெருக்கடி: காம்பீர் சொல்கிறார்

Published On 2021-08-19 10:13 GMT   |   Update On 2021-08-19 15:44 GMT
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக முதல் லீக் ஆட்டத்தில் மோதும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகம் என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கிறது. இதன் ‘சூப்பர் 12’ சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் அக்டோபர் 24-ந்தேதி முதல் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் மோதுவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. கடைசியாக இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலக கோப்பையில் மோதின. இதில் இந்தியா 89 ரன்னில் வெற்றிபெற்றது.

இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான் அணிக்கு அதிகமான நெருக்கடி உள்ளது என்று முன்னாள் தொடக்க வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘தற்போதுள்ள நிலைமையில் இந்திய அணி மிகவும் பலம் பெற்று திகழ்கிறது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு அதிகமான நெருக்கடி உள்ளது. உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் 5 முறை தோற்றுள்ளது. இந்த நெருக்கடியில் அந்த அணி விளையாட வேண்டிய நிலை இருக்கிறது’’ என்றார்.
Tags:    

Similar News